போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு

ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளில் ஒன்று என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷனுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டிருப்பது இந்திய பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நிச்சயம், பிரதமர் மோடி அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று.

பாகிஸ்தான் மக்கள் மற்றும் அந்நாட்டு ராணுவ நிலைகளுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல், 20 நிமிடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி இந்தப் போரை நிறுத்தினார்.

அமெரிக்காவின் அழுத்தத்தினால் இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. யார் பேச்சையும் கேட்கும் நிலை இந்தியாவுக்கு இல்லை. எங்களுக்கு எங்களுடைய சொந்த உத்திகள். பிரதமர் மோடியின் ஞானம் வென்றது. நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எந்த சண்டைக்கும் போக மாட்டோம். யாராவது எங்களை சீண்டினால் சும்மா விட மாட்டோம்.

நாட்டைப் பாதுகாக்கும் திறன் நம்மிடமம் உள்ளது. அனைத்து நாடுகளுடனும் நட்புறவையே தொடர விரும்புகிறோம். உலகளவில் பிரதமர் மோடி மிகவும் உயர்ந்த தலைவர். அது நமது நாட்டிற்கு கிடைத்த பெருமை, எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...