பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது

‘கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மறுவரையறை செய்துள்ளது’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுறும் நிலையில், மத்திய அரசின் ஆட்சி குறித்து நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

கடந்த, 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது.

துாய்மை இந்தியா வாயிலாக கண்ணியத்தை உறுதி செய்வதிலிருந்து, ‘ஜன் தன்’ எனப்படும் அனைவருக்கும் வங்கி கணக்குகள் திட்டம் வாயிலாக, அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் வரை, பல்வேறு முயற்சிகளால், நம் பெண் சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

‘உஜ்வாலா’ எனப்படும் இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பல வீடுகளுக்கு புகை இல்லா சமையலறைகளை கொண்டு வந்தது, ஒரு மைல்கல் சாதனை.

முத்ரா கடன்கள், லட்சக் கணக்கான பெண்கள் தொழில்முனைவோராகவும், தங்கள் கனவுகளை சுதந்திரமாகத் தொடரவும் உதவியுள்ளன.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்குவது அவர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தையைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய இயக்கமாக, ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் உள்ளது.

அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி, பலரை ஊக்குவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...