பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொற்காலம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 3வது ஆட்சி காலத்தின் முதலாம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பா.ஜ., அரசின் சாதனைகள் பட்டியலிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொற்காலம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவி காலத்தில், இந்தியா சீரமைப்பு, செயல்திறன் உள்ளிட்டவற்றால், வளர்ச்சி மற்றும் சுயசார்பு பாதையில் வேகமாக முன்னேறுகிறது. பிரதமர் மோடியின் இந்த 11 ஆண்டு கால ஆட்சியானது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும், பொது சேவைகளின் அர்ப்பணிப்புகளின் பொற்காலம் என்று சொல்லலாம்.
பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில், புதிய அத்தியாயத்தை இந்த நாடு கண்டு வருகிறது. ‘குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சியின் வேகமும், அளவும் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த 11 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரை மையமாகக் கொண்டு, ஆட்சியை நடத்தி வருகிறார், இவ்வாறு கூறியுள்ளார்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |