சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்யும் திமுக உடன்பிறப்புகள் இருக்கையில் சமூகநீதி எப்படி சாத்தியமாகும்? என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது.

பெண் கல்வியையும், பெண் சுதந்திரத்தையும் போற்றி வளர்த்த தமிழகம், இன்று சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது? தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளாக பாலியல் குற்றங்களும், பதின்ம வயது கருத்தரித்தலும், குழந்தைத் திருமணங்களும் கட்டுப்பாடின்றி பெருகி வருகிறதே, ஸ்டாலின் ஆட்சியில் மகளிர் முன்னேற்றம் என்பதன் அர்த்தம் இதுதானா?

அதுசரி சாதியக் கட்டுப்பாடு, பெண்கள் பாதுகாப்பு, பகுத்தறிவு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் திமுக ஆட்சியில் நிலைகுலைந்து கிடக்கையில், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதை பற்றி மட்டும் இந்த அரசுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது? திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்யும் திமுக உடன்பிறப்புகள் இருக்கையில் சமூகநீதி எப்படி சாத்தியமாகும்?

இப்படி தங்களின் சீர்கெட்ட ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்கத் தான் இந்தி எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை, மாநில உரிமை என வாரத்திற்கு ஒரு புதிய புரளியைக் கிளப்பி மக்களை மடை மாற்றிக் கொண்டிருக்கிறாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...