அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம்

2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பா.ஜ.க போட்டியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மீண்டும் கைகோர்த்து இருக்கும் நிலையில், 2026 தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பா.ஜ.க போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க அடிப்படையில் தொகுதி பங்கீடு பெற்றால் கூட்டணி ஆட்சி நிச்சயம் என்றும், அண்மையில் பா.ஜ.க பெற்ற ஓட்டு சதவீத அடிப்படையில் தொகுதி பங்கீடு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், “மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்’ என்றார். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்கப்பட வேண்டுமானால், சமீபத்தில் பா.ஜ.க பெற்றுள்ள ஓட்டு சதவீதம் அடிப்படையில், தொகுதி பங்கீடு அமைய வேண்டும்.

கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, 19.4 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணி, 11.4 சதவீதம் ஓட்டுகள் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நான்காவது இடத்திற்கு சென்றது. இரண்டாவது இடத்தை, பா.ஜ., கைப்பற்றியது.

எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.க பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெற்றால், கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம். அதாவது, இரண்டு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட்டால், ஒரு சட்டசபை தொகுதியில், பா.ஜ.க போட்டியிட வேண்டும். அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் சரிபாதியை, பா.ஜ.க கேட்டுப் பெற வேண்டும். அப்படி செய்தால் தான், 2029 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 30 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வழி ஏற்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.