”மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கட்டணமின்றி பஸ்களில் பயணம் செய்யும் மகளிரை ‘ஓசி’ என்று தி.மு.க.,வைச் சார்ந்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியும்
இதே போன்று பஸ்களில் கட்டணமின்றி பயணிப்போரை ‘ஓசி’ என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும்,
தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் ‘ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க’ என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், தி.மு.க., மூத்த அமைச்சர் துரை முருகன் ‘அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000’ என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை ‘ஓசி’ என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பஸ்களை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ தி.மு.க., தலைவர்கள் காட்டாதது ஏன்?
அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |