தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
கோவையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: தி.மு.க.,போல் அல்லாமல் தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் இருக்கும் மாவட்டம் கோவை. கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தை திறக்க வலியுறுத்துவோம். கோவையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் நாம் மாட்டியும் கூட, நம்ம சொன்ன டார்க்கெட்டை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம். சமீபத்தில், உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறோம். வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறோம். மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு முடக்க பார்க்கிறது.
தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை. தமிழகம் கொடுத்த ஒவ்வொரு பணத்துக்கும் மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ளது. பா.ஜ., அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம்.
நான் பா.ஜ., தொண்டன். உயிர் இருக்கும் வரைக்கு இந்த கட்சியின் வளர்ச்சிக்காக மட்டும் நான் இருப்பேன். மற்ற கட்சியின் வளர்ச்சிக்காக நான் இல்லை. தொண்டனாக கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். சில இடங்களில் எங்கே வாயை மூடி கொண்டு இருக்க வேண்டுமோ, அங்கே மூடி கொண்டு இருக்கிறேன். உறுதியாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்க வேண்டும்.
கூட்டணிக்கு எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம். கூட்டணி இரண்டு. பொருந்தும் கூட்டணி. பொருந்தா கூட்டணி என இரண்டு வகை இருக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பொருந்துகிற கூட்டணியாக வரும் காலத்தில் மாறும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |