போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள்

பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு இன்று முதல் பயணம் மேற்கொள்கிறார். கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிடிஸின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

சைப்ரஸின் நிக்கோசியாவில் இருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் கிறிஸ்டோடௌலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சைப்ரஸ் இந்த நாட்டின் பெயரை நம்மில் பலரும் அதிகமாக கேள்வி பட்டு இருக்க மாட்டோம். ஆனால் பிரமதர் மோடி அந்த நாட்டுக்கு திடீரென்று செல்கிறார். இதன் பின்னணி என்னவென்றால் ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை எதிர்த்த துருக்கிக்கு ‛செக்’ வைக்கும் நடவடிக்கை உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு நாடு சைப்ரஸ். இது மத்திய கிழக்கில் அமைந்துள்ள தீவு நாடாகும். மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த சைப்ரஸ் நாடு அமைந்துள்ளது. அருகே துருக்கி, இஸ்ரேல், எகிப்து, லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் தற்போது பயங்கர மோதல் நடந்து வருகிறது. ஏவுகணை தாக்குதல்களால் பல நாடுகள் தங்களின் வான்வெளி பரப்பை மூடியுள்ள நிலையில் சைப்ரஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி விமானத்தில் சுற்றி செல்கிறார். இது யாரும் செய்யாத செயல் ஆகும்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி ரிஸ்க் எடுத்து சைப்ரஸ் நாட்டுக்கு செல்வது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமர்கள் யாரும் சைப்ரஸ் நாட்டுக்கு செல்லவில்லை. 23 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி செல்கிறார். சைப்ரஸ் நாட்டை எடுத்து கொண்டால் நம் நாட்டுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. காஷ்மீர் பிரச்சனை, எல்லை தாண்டிய பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் எப்போதும் நம் நாட்டுக்கே சைப்ரஸ் ஆதரவு தந்துள்ளது. அதேபோல் உலகளாவிய சர்வதேச மன்றங்களிலும் இந்தியாவுக்கு தோள் கொடுத்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்களில் இந்தியாவுக்கு பக்கபலமாக சைப்ரஸ் நாடு உள்ளது.

துருக்கிக்கு எதிராக பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு விசிட் செய்கிறார். அதாவது துருக்கியும், சைப்ரஸ் நாடும் அண்டை நாடுகளாகும். இருநாடுகள் இடையே கடந்த 1974 முதல் நிலப்பிரச்சனை மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன. சைப்ரஸ் நாட்டின் சில பகுதிகளை துருக்கி ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படியான சூழலில் தான் சைப்ரஸ் நாட்டுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

மேலும் சைப்ரஸ் நாடு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் முக்கிய நாடாகும். இந்த கவுன்சிலில் சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில் 2026ல் சைப்ரஸ் நாடு தான் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. இதன்மூலம் இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும். இது நம் நாட்டின் பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல துறைகளுக்கு சிறப்பானதாக அமையும்.அதேபோல் சைப்ரசும் துருக்கியின் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் துருக்கியை எதிர்க்கும் நாடுகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் இந்த விசிட் சைப்ரஸ் நாட்டுக்கும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...