10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா, சைப்ரஸ் நாடுகளின் தொழிலதிபர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக, சைப்ரசுக்கு அவர் சென்றுள்ளார். பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் நேரில் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்கு பின், சைப்ரசுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

தொடர்ந்து, லிமாசோலில் இருநாட்டு தொழிலதிபர்களையும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸூடன் இணைந்து பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் விதமாக, நானும், அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸூம் இணைந்து, இந்தியா, சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து விவரித்தேன்,’ எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...