குவாட் மாநாடு 2025: பிரதமர் மோடி அழைப்பு.. இந்தியா வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

குவாட் (QUAD) மாநாடு கூட்டத்திற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவார் என்றத் தகவலை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று (ஜூன் 17, புதன்கிழமை) உறுதிப்படுத்தினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி டிரம்பிற்கு இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறினார். டிரம்ப் அழைப்பை ஏற்றுக்கொண்டார், மேலும் அவரது இந்திய வருகை குறித்து அவர் உற்சாகமாக உள்ளார் எனவும் கூறினார்.

இரு தலைவர்களும் 35 நிமிட உரையாடல் நடத்தினர். இரு நாட்டு தலைவர்கள் ஜி7 உச்சிமாநாட்டின் (G7 Summit) போது சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவிற்கு சீக்கிரமாகத் திரும்ப வேண்டியிருந்தது, இதனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்றும் வெளியுறவுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அதன் பிறகு, ஜனாதிபதி டிரம்பின் வேண்டுகோளின் பேரில், இன்று இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். அவர்கள் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பேசினர் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆதரவையும் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் பேசுவது இதுவே முதல் முறை. எனவே, பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாகப் பேசினார் என்றும் மிஸ்ரி கூறினார்.

டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையின் போது பல முக்கியமான விஷயங்கள் அவரது நிகழ்ச்சி நிரலில் இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்து குவாட் அமைப்பை (Quadrilateral Security Dialogue) ஏற்படுத்தியுள்ளன.

கடைசி குவாட் மாநாடு 2024 இல் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் குவாட் மாநாடு நடைபெற்றது

இந்தாண்டுக்கான குவாட் மாநாடு 2025 இந்தியாவில் நடத்தப்படுகிறது. குவாட் 2025 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இதுவரை, குவாட் குழுவின் தலைவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 6 முறை சந்தித்துள்ளனர். இதில் இரண்டு மெய்நிகர் சந்திப்புகள் அடங்கும். குவாட் வெளியுறவு அமைச்சர்கள் எட்டு முறை சந்தித்துள்ளனர். குவாட் நாட்டு பிரதிநிதிகள் அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து சந்தித்து ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...