காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்

2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடைக்கும்படி அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

போதிய ஓய்வு இல்லாமலும், விடுமுறை இல்லாமலும் காவலர்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காவல்துறைக்கான பதவி உயர்வுக்கான காலத்தை குறைக்கிறேன் என்ற பெயரில் புதிய அரசாணை பிறப்பித்து, 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காவலர்களுக்கு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடையாது என மேலும் வதைத்துள்ளது தமிழக அரசு.

கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்த காவல்துறையில் பணி உயர்வு பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியை, நெடுங்காலமாக கிடப்பில் போட்டு காலந்தாழ்த்தி விட்டு இப்போது அரசாணை பிறப்பிக்க காரணம், இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வருவதனாலா? அல்லது 37,000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் ஏமாற்றி செலவைக் குறைக்கலாம் எனும் எண்ணமா? என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் திசை எட்டும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கின் சுவடு தேய்ந்து வரும் நிலையில், இப்படி காவலர்களின் பணி நியமன ஆண்டை கருத்தில் கொண்டு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டினால், காவலர்களின் பணித்திறன் பாதிக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே, 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடைக்கும்படி அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...