அநீதியை அழித்ததாலும், அனைவரையும் சமமாக நடத்தியதாலும் உலகின் முதல் புரட்சித்தலைவராக முருகன் உள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
கடவுளை கேலிசெய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என சிலர் பேசுவதாகவும், அரேபியாவில் இருந்துவந்த மதம் பற்றி பேச முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது.
இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றுள்ளனர்.
இதில் பவன் கல்யாண் பேசியதாவது,
உலகம் முழுவதும் பரந்து நிறைந் துள்ளார் முருகன். இருந்தாலும் அவர் பாதம் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால், இந்தமண்ணை வணங்குகிறேன். அந்தக் காரணத்தாலேயே தமிழ்நாட்டில் முருகன்மாநாடு நடக்கிறது.
சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்; இந்துமதத்தில் நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ணர் கருப்பு, காளியும் கருப்பு.
ஆனால், நிறத்தைவைத்து முருகனை சீண்டி பார்க்கிறது ஒருகூட்டம். கந்த சஷ்டி கவசத்தை சிலர் கிண்டல் செய்கின்றனர். கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என்கின்றனர்.
அரசமைப்பு கொடுத்த சுதந்திரத்தை பயன் படுத்தி இவ்வாறு பேசுகின்றனர். நம்மை காப்பாற்றும் முருகனை நாம்காப்பாற்ற வேண்டும்.
மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைபடுத்த அவர்கள் யார்? அவர்களால் மற்றவர்கள் பற்றி இதுபோல பேச முடியுமா? எனது உரிமையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது? அதை நீங்கள் கேள்விகேட்கலாமா? அரேபியாவில் இருந்து வந்தமதம் பற்றி பேச முடியுமா?
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |