5 லட்சம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்; மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பரவசம்

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக, 5 லட்சம் பக்தர்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி, பரவசம் ஏற்படுத்தினர். மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், ”முருகனைப்பற்றி இழிவாக யாரேனும் பேசினால் உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா, பதற வேண்டாமா, துடிக்க வேண்டாமா,”’ என்று ஆவேசமாக பேசினார்.

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் ‘குன்றம் காக்க.. கோயிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று (ஜூன் 22) மதியம் 3:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. ஆதீனங்கள், முக்கிய தலைவர்கள் பேசினர்.

8 லட்சம் சதுர அடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 6 அடி உயரத்தில் சிறிய மேடையும், அதன் பின் 10 அடி உயரத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் மையத்தில் முருகன் வேலுடன் நிற்பது போன்ற பதாகையும், அதன் பின் கோவில் கோபுரமும், குன்றமும் இருக்கும் படி அமைக்கப்பட்டு இருந்தன.

கந்தசஷ்டி கவசம்
மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, செல்லுார் ராஜூ ஆகியோரும் பங்கேற்றனர். மைதானம் முழுவதும் முருக பக்தர்கள் குவிந்துள்ளனர்.

மாநாட்டில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், ”முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்த திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபுக்கு எனது பாராட்டுக்கள். நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார்; கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது, அதில் எவ்வளவு ஊழல் நடந்தது என வெளியிட அமைச்சர் சேகர்பாபு தயாரா,” என்று கேள்வி எழுப்பினார்.

கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், ஆசியுரை வழங்கினார்.

பவன் கல்யாண் கேள்வி

தொடர்ந்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், ”முருகனைப்பற்றி இழிவாக யாரேனும் பேசினால் உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா, பதற வேண்டாமா, துடிக்க வேண்டாமா,”’ என்று ஆவேசமாக பேசினார்.

மாநாட்டின் நிறைவாக, பங்கேற்ற 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். எங்கும் இதுவரை நடந்திராத வகையில், ஒரே நேரத்தில் முருகனை நினைத்து லட்சக்கணக்கான பேர் கந்த சஷ்டி கவசம் பாடியது, பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது.

மாநாட்டின் தீர்மானங்கள்

திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றுவோம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாராட்டு

சென்னிமலை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட முருகனின் குன்றுகளை பாதுகாக்க வேண்டும்

கோவில்களை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்

ஹிந்துக்கள் ஒன்றுபட்டு இனி வரும் தேர்தல்களில் ஹிந்து ஓட்டு வங்கியை நிருபிக்க வேண்டும்

மாதந்தோறும் சஷ்டியன்று கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...