தீவிரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான அவசரகாலக் கொள்முதல்

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் பதின்மூன்று ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. ஒட்டுமொத்தமான ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ. 1,981.90 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள், இறுதி செய்யப்பட்டுள்ளன.

அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் கொள்முதல் நடைமுறைகள் விரைவுப்படுத்தப்படும். தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும்.

கொள்முதல் செய்யப்படும் ஆயுத தளவாடங்களின் விவரங்கள் பின்வருமாறு:

* ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்புகள்

* குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள்

* மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள்

* தொலைதூரத்தில் இயக்கப்படும் வான்வழி வாகனங்கள் (RPAVகள்)

* செங்குத்தாக மேலெழுந்து சென்று அதே போன்று தரையிறங்கக் கூடியதுமான போர் விமானங்கள்

* பல்வேறு வகையான ட்ரோன்கள்

* குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள்

* பாலிஸ்டிக் தலைக்கவசங்கள்

* விரைந்து எதிர்வினையாற்றும் கனரக மற்றும் நடுத்தர போர் வாகனங்கள்

* இரவில் இலக்கை அடையாளம் காணும் வகையிலான துப்பாக்கி ரகங்கள்

இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் பாதுகாப்பு படையினருக்கு உதவிடும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...