எமர்ஜென்ஸி கால நினைவுகள் என்றும் மறையாது: அமித்ஷா

எமர்ஜென்ஸியின் போன்ற நிகழ்வுகளின் நினைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டால், அது நாட்டிற்கு தீங்கை விளைவிக்கும் ” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: எமர்ஜென்ஸி அமல்படுத்தப்பட்டதன் 50 வது ஆண்டு தினத்தை நாம் நினைவு கூர்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் விவாதிக்க வேண்டும் என கேள்விகள் எழலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நடந்த நிகழ்வு ஒன்றின் முடிவு நல்லது அல்லது கெட்டதாக இருந்தாலும், அதன் நினைவுகள் சமூகத்தில் இருந்து மாறாது. ஜனநாயகத்தை உலுக்கிய எமர்ஜென்ஸி போன்ற நிகழ்வுகளின் நினைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டால், அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.

சர்வாதிகாரத்தை ஒருவராலும் பொறுத்து கொள்ள முடியாத காரணத்தினால் எமர்ஜென்ஸிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடிந்தது. இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாய். எமர்ஜென்ஸியை யாரும் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதில், சர்வாதிகாரிகள் மற்றும் அதனால் பலனடைந்த சிறு குழுக்கள் மட்டுமே ஆதரித்தன.

இதனை யாரும் எதிர்க்கவில்லை என்று நினைத்தார்கள். ஆனால், எமர்ஜென்ஸிக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தலில், நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி இல்லாத ஆட்சி அமைந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார்

எமர்ஜென்ஸயை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாது. இதற்கான எனது விளக்கமானது,’ ஒரு ஜனநாயக நாட்டில், பல கட்சி ஜனநாயகத்தை சர்வாதிகாரத்திற்கான சதித்திட்டம் ‘ என்பதாகும்.

நாட்டில் எமர்ஜென்ஸி அமல்படுத்தப்பட்ட போது, எனக்கு 11 வயது தான் இருந்தது . இதன் தாக்கம், குஜராத்தில், ஜனதா கட்சி ஆட்சி காரணமாக, குறைவாக இருந்தது. அந்த ஆட்சி கவிழ்ந்த பிறகு, நிலைமை மாறியது. எனது கிராமத்தில் மட்டும் 184 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நாட்களை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...