விண்வெளியில் இருக்கும் சுபான்ஷு சுக்லாவுடன் உரையாடிய பிரதமர் மோடி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடியுள்ளார். சுபான்ஷு சுக்லாவின் உடல் நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

அமெரிக்காவின் டிராகன் விண்கலம் வாயிலாக 4 பேர் குழுவில் ஒருவராக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் ஆக்ஸியம் – 4 என்ற திட்டத்தின் கீழ் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டது. இந்த ஆக்சியம் திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் 25 ஆம் தேதி பிற்பகல் 12.01 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றார். சுமார் 28 மணிநேர பயணத்துக்குப் பின்னர் 400 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் இணைந்தது.

40 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்தக் குழுவினர் 60 பரிசோதனைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவற்றில் 7 பரிசோதனைகளுக்கு சுபான்ஷு சுக்லா தலைமை தாங்குகிறார்.

இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடி உள்ளார். சுபான்ஷு சுக்லாவின் உடல் நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக டிராகன் விண்கலத்திலிருந்து சக விண்வெளி வீரர்களுடன் நேரடியாகப் பேசிய சுபான்ஷு சுக்லா, “விண்வெளியில் நுழைந்த பிறகு உடல்நிலை நன்றாக இருப்பதாக உணரவில்லை. அதன் பிறகு நுண் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். எப்படி சாப்பிடுவது, எப்படி நடப்பது என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தை போல் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...