‘இந்திய ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையை பா.ஜ., மட்டுமே பெற்றுள்ளது,’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பீஹாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதன் அடிப்படையில், பா.ஜ., தயாராகி வருகிறது.
இந்நிலையில் பீஹார் மாநிலம் பாட்னாவில் ஜியான் பவனில் இன்று பா.ஜ., செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
‘இந்திய ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்துள்ளது. ஆனால் அந்த நம்பிக்கையை பா.ஜ., மட்டுமே பெற்றுள்ளது.
பா.ஜ., மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி உள்ளது. அதை மக்கள் பா.ஜ., வெளியிட்டதேர்தல் அறிக்கை புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இனி வரும் காலங்களிலும் பா.ஜ., அளிக்கும் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றுவோம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |