கானாவின் உயரிய விருதை பிரதமர் பெற்றுக் கொண்டார்

கானா அதிபர் திரு ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கானாவின் தேசிய விருதான ‘ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்’ விருதை வழங்கினார். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த விருதை இந்திய இளைஞர்களின் விருப்பங்களுக்கும், அதன் கலாச்சார மரபுகள், பன்முகத்தன்மைக்கும், கானாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாக கூறினார்.

இந்த சிறப்புமிக்க விருதை வழங்கிய கானா மக்களுக்கும் அரசுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். இது இரு நாடுகளின் பொதுவான ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மரபுகளிடையேயான ஒற்றுமையை தொடர்ந்து மேம்படுத்தும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த விருது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேலும் ஆழப்படுத்துவதாகவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய பொறுப்பை தமக்கு வழங்குவதாகவும் கூறினார். கானாவிற்கான தமது வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் இந்தியா – கானா உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...