இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.
கானா பயணத்தை முடித்துவிட்டு வியாழக்கிழமை டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு பாரம்பரிய முறைப்படி மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவின் அடுத்தகட்ட விண்வெளி திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
அப்போது மோடி பேசியதாவது:
”தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் அடைந்திருக்கிறார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
விரைவில் இந்தியர் ஒருவர் நிலவில் நடப்பார், இந்தியாவுக்கென சொந்தமாக விண்வெளி நிலையம் விரைவில் அமைக்கப்படும்.
இந்தியாவின் வளர்ச்சியில் நீங்கள் அனைவரும் பெருமை கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். புதிய இந்தியாவுக்கு வானம்கூட எல்லை அல்ல. இந்தியாவின் சந்திரயான் நிலவில் இறங்கியபோது, நீங்கள் ஆதரவு அளித்திருப்பீர்கள். தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி புள்ளி எனப் பெயரிட்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |