”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு அல்ல, அது ஒரு கலாச்சாரம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல் 9-ம் தேதி வரை 8 நாள் அரசுமுறைப் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா, மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதலில், கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக முதலில் சென்றுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கானா நாட்டிற்கு செல்லும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அங்கு, கானா அதிபருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவின் பாரம்பரிய முறையில் உருவாக்கப்படும் அழகான குவளைகளை பரிசாக அளித்துள்ளார்.

கானாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றி உள்ளார். ‘இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு அல்ல, அது ஒரு கலாச்சாரம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியாவின் பன்முகத்தன்மை சவால் அல்ல, மாறாக அது இந்தியாவின் பலம், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. இந்தியா மற்றும் கானாவின் வரலாறுகள் காலனித்துவ ஆட்சியின் வடுக்களைத் தாங்கி நிற்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது.

கானா நாட்டின் நாடாளுமன்றத்தில் முதல் இந்திய பிரதமராக உரையாற்றுவதில் பெருமை கொள்கிறேன். ஜனநாயகத்தை நிலைநாட்டும் ஆட்சி கானாவில் நடைபெற்று வருகிறது ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது கானா, ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் 2,500-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன, 20 வெவ்வேறு கட்சிகள் இந்திய மாநிலங்களை ஆள்கின்றன. தெற்குலக நாடுகளுக்கு குரல்கொடுக்காமல், உலக அளவிலான முன்னேற்றத்தை எட்ட முடியாது என்றும், இதைக்கருத்தில் கொண்டே ஒரே உலகம்-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம் என்ற தொலைநோக்கு பார்வையை இந்தியா வலியுறுத்தி வருவதாகவும்” கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...