டிரினிடாட் -அண்டு – டபேகோ பயணத்தில் பீஹாரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

அரசுமுறை பயணமாக கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டபேகோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டு பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசரை, ‘பீஹாரின் மகள்’ என்று புகழாரம் சூட்டினார்.

கானா, டிரினிடாட்- அண்டு டபேகோ குடியரசு, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு, ஒருவார அரசுமுறை பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். கானா நாட்டை அடுத்து, டிரினிடாட் அண்டு டபேகோ குடியரசுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார்.

அங்குள்ள போர்ட் ஆப் ஸ்பெயின் விமான நிலையத்தில் தரையிறங்கிய மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் மற்றும் 38 அமைச்சர்களும், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நம் நாட்டின் பீஹார் மாநில பாரம்பரிய உடையணிந்து, போஜ்புரி நாட்டுப்புற பாடல்களுடன் அளிக்கப்பட்ட கோலாகல வரவேற்பில் மோடி நெகிழ்ந்தார். தீவு நாடான டிரினிடாட் அண்டு டபேகோவில், 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில், 45 சதவீதத்துக்கும் அதிகமானோர், பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர்.

இவர்களின் மூதாதையர் பல ஆண்டுகளுக்கு முன்பே, டிரினிடாட் அண்டு டபேகோவில் ஒப்பந்த தொழிலாளர்களாக குடியேறினர். இந்த தொடர்பு காரணமாகவே, பிரதமருக்கு பீஹார் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு பிரதமர் மற்றும் சக அமைச்சர்களுடன் உரையாடிய போது, ‘டில்லி, பனாரஸ், பாட்னா, கொல்கட்டா நகரங்களின் பெயர்களில், ட்ரினிடாட் அண்டு டபேகோவின் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பது எங்கள் நாட்டிற்கு பெருமை’ என, பிரதமர் குறிப்பிட்டார்.

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கம்லாவை பீஹாரின் மகள் என்று குறிப்பிட்டார். ‘பிரதமர் கம்லாவின் மூதாதையர், பீஹாரின் பக்சார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர், அந்த இடத்துக்கெல்லாம் சென்றுள்ளார். அங்குள்ள மக்கள், கம்லாவை பீஹாரின் மகளாகவே பார்க்கின்றனர்’ என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...