தமிழ்ப்பற்றை மீண்டும் வெளிப்படுத்தினார் பிரதமர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மகிழ்ச்சி

‘ட்ரினிடாட் மற்றும் டொபாகோ’ பயணத்தில், மீண்டும் ஒருமுறை தனது தமிழ்ப் பற்றை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

உலகின் எந்த தேசத்திற்குச் சென்றாலும், இந்தியாவின் பழம்பெருமைகளில் ஒன்றான தமிழ் மொழி மற்றும் தமிழரின் பெருமைகளை பறைசாற்றம் பிரதமர்

நரேந்திர மோடி, கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டு பயணத்தின் போது, மீண்டும் ஒருமுறை தனது தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

ட்ரினிடாட் மற்றும் டொபாகோ அதிபர் கிறிஸ்டைன் கங்காலு அவர்களின் பூர்வீகம் தமிழ் என்பதறிந்து,

‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு’.

– வீரம் நிறைந்த படைபலம், தேசநலன் மீது அக்கறை கொண்ட மக்கள், அள்ளக் குறையாத செல்வம், நாட்டின் நலனறிந்து செயல்படும் அமைச்சர், அழிக்க முடியாத ராணுவம் மற்றும் ஆபத்தான காலங்களில் துணைநிற்கும் நட்பு நாடு; இவை அனைத்தும் தான் ஒரு தேசம் வளம் மிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு தேவையான ஆறு அம்சங்கள் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ‘அய்யன் வள்ளுவன்’ உரைக்கிறார் என்று கூறி, திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் புகழை உலக அரங்கில் பதியச் செய்துள்ளார்.

மேற்சொன்ன திருக்குறளின் பொருளுக்கேற்ப, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாடானது இந்தியாவுடன் எப்போதும் நல்ல விதமான நட்புறவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பயணத்தின் போது, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, ‘தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் ட்ரினிடாட் அண்ட் டொபாகோ’ விருதும் நமது பிரதமருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்காக, நாட்டு மக்கள் சார்பாகவும், உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் சார்பாகவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எல்.முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...