மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

”மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்,” என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த ‘எல்லைகளுக்கு அப்பால்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக, உலகம் முழுவதும் மோதல் சூழல் நிலவி வருகிறது.

போர்களின் பின்னணியில் எந்த நேரத்திலும் 3ம் உலகப் போர் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்றைய போரில், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் நேரடியாக குறிவைக்கப்படுகிறார்கள்.

இதற்கெல்லாம் மத்தியில், மனிதகுலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது. பெரும்பாலும் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான பிரச்னையை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த பிரச்னைகள் அனைத்தும் உலக அளவில் விவாதிக்கப்பட வேண்டும். வல்லரசுகளின் சர்வாதிகாரம், நல்லிணக்கம் மற்றும் அன்பை அழித்து வருகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக போரின் பரிமாணங்கள் மாறிவிட்டன.

ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. டாங்கிகள் மற்றும் பிற வகை விமானங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.

உலகிற்கு உண்மை, அகிம்சை மற்றும் அமைதியை வழங்கிய புத்தரின் பூமி இந்தியா.
இப்போது உலகம் முழுவதும் மோதல் சூழ்நிலை நிலவுகிறது. சர்வதேச முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, விவாதங்களுக்குப் பிறகு எதிர்காலக் கொள்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீ ...

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போரால் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில் ...

மேற்காசியாவில் நிலவும் பதற்றம ...

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் – மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் மேற்காசியாவில் நிலவும் அசாதாரணமான நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர ...

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபத ...

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருக்கிறோம்” – பிரதமர் மோடி மகிழ்ச்சி மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் ...

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அ ...

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வல்லது பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம்” – பிரதமர் மோடி குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட ...

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் ...

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்- தொடக்கி வைத்த மோடி டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, ...

ஆதரவளிக்கும் பிரதமரின் விஸ்வக ...

ஆதரவளிக்கும்  பிரதமரின் விஸ்வகர்மா திட்டங்கள் உதயம் பதிவு தளம், உதயம் உதவித் தளம் ஆகியவற்றில் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...