17 நாடுகளின் பார்லியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி; பா.ஜ., பெருமிதம்

வெளிநாட்டு பார்லிமென்டுகளில் இதுவரையில் காங்கிரஸ் பிரதமர்கள் 17 முறை உரை நிகழ்த்தியுள்ளனர். பிரதமர் மோடி மட்டும் 17 நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றி, உலகளவில் மிகவும் மதிக்கப்படும் இந்திய பிரதமர் என்பதை உறுதி செய்துள்ளதாக பா.ஜ., பெருமிதம் தெரிவித்துள்ளது.

கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நேற்று நமீபியா சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் போது, அந்நாட்டின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நமீபியா நாட்டின் பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன்மூலம், பல ஆண்டுகளாக காங்கிரஸ் பிரதமர்கள் செய்த செயலை, இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தனியொரு ஆளாக செய்துள்ளார்.

வெளிநாட்டு பார்லிமென்டுகளில் இதுவரையில் காங்கிரஸ் பிரதமர்கள் 17 முறை உரை நிகழ்த்தியுள்ளனர். பிரதமர் மோடி மட்டும் 17 நாடுகளின் பார்லிமென்டின் உரையாற்றியுள்ளதாக பா.ஜ., பெருமிதம் தெரிவத்துள்ளது.

இது குறித்து பா.ஜ., வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘இந்த சுற்றுப்பயணத்தின் போது, கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளின் பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் 17 நாடுகளின் பார்லிமென்ட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பிரதமர்கள் ஒட்டுமொத்தமாகவே 17 நாடுகளின் பார்லிமென்டுகளில் உரையாற்றியுள்ளனர். உலகளவில் மிகவும் மதிக்கப்படும் இந்திய தலைவர்களில் ஒருவர் என்பதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்,’ என தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் பிரதமர்களான மன்மோகன் சிங் 7 முறையும், இந்திரா காந்தி 4 முறையும், நேரு 3 முறையும், ராஜிவ் 2 முறையும், பி.வி.நரசிம்மா ராவ் ஒரு முறை என மொத்தம் 17 நாடுகளின் பார்லிமென்டில் உரைநிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.