பிரேசில் நாட்டின் உயரிய விருதான ‘தி க்ராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’ (The Grand Collar of the National Order of the Southern Cross) என்ற விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அவர், இது தனக்கு சற்று உணர்ச்சிப்பூர்வமான தருணம் எனக் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரகால பயணமாக கானா, டிரினிடாட் & டுபாகோ, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரேசிலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, பயங்கரவாதிகளுக்கு எதிரான கண்டனம், அமெரிக்க வரி விதிப்புக்கு எதிரான விவாதம் உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருதான ‘க்ராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’ என்ற விருது நேற்று வழங்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இந்த விருதை மோடிக்கு வழங்கி ஆரத்தழுவி வாழ்த்தினார். 2014-இல் பிரதமராக மோடி பதவியேற்றது முதலாக, அவருக்கு கிடைத்த 26வது சர்வதேச அங்கீகாரமாக இந்த விருது பார்க்கப்படுகிறது.
விருது பெற்றிருப்பது குறித்து பேசிய மோடி, “இந்த சிறப்புமிக்க கௌரவத்திற்காக, பிரேசில் நாட்டு அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும், இந்தியா – பிரேசில் இடையேயான உறவுக்கும் அர்ப்பணிக்கிறேன். பிரேசிலின் உயரிய விருதை பெறுவது எனக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உணர்ச்சிகரமான தருணமாக நான் பார்க்கிறேன்.
பிரேசில் அதிபர் லூலாவுக்கும், அந்நாட்டு அரசாங்கத்துக்கும், பிரேசில் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது பிரேசில் மக்கள் இந்தியர்களின்மீது கொண்டுள்ள ஆழமான அன்பை காட்டுகிறது” எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பிரேசில் அதிபருடன், நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, ஆப்பிரிக்காவின் கானா நாட்டுக்கு சென்றிருந்த மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘தி ஆபீஸர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் தி கானா’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |