சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டுக்கு ஜெய்சங்கர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இரு நாடுகளும் உறவுகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்த மோதலுக்கு பிறகு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் வேறு நாடுகளில் சந்தித்து பேசி உள்ளனர்.

இச்சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் நடக்கிறது. கடந்த மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இம்மாநாட்டில் பங்கேற்றார்.

இந்நிலையில், வரும் 14 – 15 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கிறது. இம்மாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னர் அவர், தலைநகர் பீஜிங் சென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயையும் அவர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...