இருதரப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி; சிங்கப்பூர் துணை பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் நெகிழ்ச்சி

இருதரப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது என சிங்கப்பூர் துணை பிரதமரை சந்தித்த பின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் சீனாவிற்கு மூன்று நாள் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங்கை சந்தித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேபல்வேறு இருதரப்பு முயற்சிகளில் நிலையான முன்னேற்றத்தைக் கவனிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 3வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் பயணத்தைத் தொடர்ந்து, ஜெய்சங்கர், சீன நகரமான தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா செல்வார். சீனாவில், நாளை (ஜூலை 14), நாளை மறுநாள் (ஜூலை 15) ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...