தமிழகம் வரும் மோடி: ஆடித் திருவாதிரை ஏன் முக்கியம்?

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 1000 ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் ஆலயம் சோழர் கால கலை மற்றும் கட்டிடக்கலையின் பெருமையை பறைசாற்றுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர உள்ளார். வரும் 27ம் தேதி ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெறும் ஆடி திருவாதிரையில் பங்கேற்க இருக்கிறார்.

இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர்கள்கள் ஷெகாவத் (கலாச்சாரம்), எல்.முருகன் (செய்தி ஒலிபரப்பு) ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழ புரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ் வாய்ந்த ஒன்றாகும். இது, முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப் பாகவும் வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தின் சிறப்பை கண்டுகளிக்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

மிகவும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆடி மாத திருவாதிரை விழாவானது, தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் வெகு விமரிசையாகவும், சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வரும் 27 ஆம் தேதி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...