பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு

‘தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ஆட்சி கட்டிலில் ஏறியதும், அதிகாரிகளை பேச விட்டு, தி.மு.க., அரசு அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா?’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்ந்து, எட்டு நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தம் கோரி போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தி.மு.க., அரசு கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டுவதுடன், கைது செய்து வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது.

பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோருவது தவறா?

தேர்தல் நேரத்தில் மட்டும், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ஆட்சி கட்டிலில் ஏறியதும், அதிகாரிகளை பேச விட்டு, அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா? தங்கள் உரிமைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும், ஆசிரியர்கள் போராடட்டும் என, அலைக்கழிப்பதால், அரசு பள்ளி மாணவர்களின் நலனும் பாதிக்கப்படும் எனும் அடிப்படை உண்மையை கூட உணர இயலாதா?

ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசு. ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என்று விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு, உடனே பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை காக்கும் பொருட்டு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இல்லையெனில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று, போராட்ட களத்தில் இருப்போருக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...