பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு

நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத்கூறியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் ஹூடாட்மா ஸ்மிருதி மந்திரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆண்களுக்கு பயிற்சி அளித்தால்அவர் வாழ்நாள் முழுவதும்உழைப்பர். பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்போது, அவர் வேலை பார்ப்பதுடன், அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சியையும் உறுதி செய்வர்.

பெண்கள் தான் மதிப்புகளையும், பாசத்தையும் ஊட்டுகிறார். அவர்களின் பாசத்தில் தான் குழந்தைகள் வளர்கிறார்கள். 12 வயது வரை குழந்தைகள் பெற்றோரின் நிழலில் இருக்கிறார்கள். அது தான் அவர்களின் அடித்தளம் ஆகும். அப்போதுதான் அவர்களின் இயல்பான குணம் உருவாகிறது.

வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர்கள் தொலைந்து போனாலும், இந்த அடித்தளத்துக்கு முயற்சி செய்கிறார்கள். இந்த அடித்தளத்தை வலுப்படுத்துவது தான் முக்கியம். இதைத்தான் தாயார்கள் செய்து வருகின்றனர்.

ஆண்களுக்கு வழங்கிய திறன்களை பெண்களுக்கும் கடவுள் வழங்கி உள்ளார். ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்யலாம். இதனால், பெண்களை உயர்த்துகிறோம் என்ற ஆணவத்துடன் ஆண்கள் பணியாற்றக்கூடாது. பெண்கள் செய்ய விரும்பும் வேலையை அவர்கள் அனுமதித்து அவர்களை திறமையானவர்களாக மாற்ற ஆண்கள் முயற்சிக்க வேண்டும்.

பாரம்பரியக் கட்டுப்பாடுகளில் இருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளை வழங்க வேண்டும். இன்று பெண்கள் பல துறைகளில் முன்னணியில் உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பது முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...