திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி

‘தமிழகத்தில் இதுவரை இடிந்து விழுந்த அரசுப் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்’ என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை; கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது. நேற்று விடுமுறை தினமானதால், வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தி ஆகியிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டடங்கள் கட்டுவதில் கூட, தி.மு.க., அரசு இத்தனை அலட்சியமாகச் செயல்படுவதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், தி.மு.க. அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா?

கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க., அரசு எந்தெந்த மாவட்டங்களில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டியுள்ளன என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு, ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் கடிதம் எழுதி நாடகமாடியதோடு நிறுத்திக் கொண்டார் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். விளம்பர ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இதுவரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசு கட்டிய கட்டடங்கள் அனைத்தையுமே, தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்குவது, அனைத்துத் தரப்பு மக்களுக்குமே நல்லது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...