‘வாழும் ராஜேந்திர சோழனாக பிரதமர் மோடி திகழ்கிறார்’- நயினார் நாகேந்திரன்

ஜூலை 26 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வருகைத் தர உள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பினை வழங்க பாஜகவினர் திட்டமிட்டு வரும் நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

நயினார் நாகேந்திரன் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகை தந்து, புதிய விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென் தமிழகத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைப்பது தமிழகத்திற்கு பாஜக எதுவும் செய்யவில்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு பதில். ’வாழும் ராஜேந்திர சோழனாக பிரதமர் மோடி இருந்து வருகிறார்’ அவரால் தமிழகத்திற்கு நன்மை மட்டுமே கிடைக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் பேரைத் திரட்டி பிரதமரை வரவேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது அதிமுகவில் இருந்த அன்வர் ராஜாவுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைந்த பின்னர் திமுக பதட்டத்திலேயே இருக்கிறது” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கரூர், தருமபுரி போன்ற இடங்களில் 10 கொலைகள் நடந்துள்ளன. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஒரு ‘சேடிஸ்ட்’ போன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். சிவகங்கை அஜித்குமார் காவல் மரணத்திற்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தான் மூல காரணம். தேர்தல் பிரச்சாரம் செய்து திமுகவை வீட்டுக்கு அனுப்பத் தேவையில்லை. டேவிட்சன் தேவாசீர்வாதத்தாலேயே திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், “சென்னை மாநில கல்லூரி வாசலில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவினர் கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப் பொருட்களை விற்கச் சென்றிருப்பார்கள்” என்றும் நயினார் நாகேந்திரன் கடுமையாக திமுகவின் பிரச்சாரத்தை விமர்சித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...