கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை திருவிழா ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது: பிரதமர் பங்கேற்பு

முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த தினத்தையும், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் 1000-வது ஆண்டையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையிலும் ஆடித் திருவாதிரை திருவிழாவாக ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை மத்திய அரசு கலாச்சார அமைச்சகம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடுகிறது.

இத்திருவிழா கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் உள்ள தென் மண்டல கலாச்சார மையத்தின் ஆதரவுடன் பயிற்சி பெற்ற மாணவர்களின் தேவாரம் திருமுறை மற்றும் கலாஷேத்ரா கலைஞர்களின் நிகழ்ச்சி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுடன் 23-ம் தேதி மாலை தொடங்குகிறது.

இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சோழ சைவம், கோயில் கட்டடக்கலை பாரம்பரிய நடைபயணம் மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய பயணங்கள் குறித்த கண்காட்சியை நடத்துகிறது.

ஜூலை 27 அன்று முற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மற்றும் பிரமுகர்கள், உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள தேவாரம் பாடல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவுள்ளது. 27-ம் தேதி அன்று கலாஷேத்ராவின் பரதநாட்டிய குழு நிகழ்ச்சியும், பாரம்பரியமிக்க ஓதுவார்கள் குழு தேவாரம் திருமுறையை ஓதும் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. அத்துடன் பத்மபூஷன் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

சைவ சித்தாந்தத்தின் செழுமையான தத்துவ பாரம்பரியத்தையும், தமிழின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டுவது, சைவ சமயத்திற்கு நாயன்மார்களின் பங்களிப்பை கொண்டாடுவது, சைவ சமயத்திற்கு ராஜேந்திர சோழன் மற்றும் சோழர்கள் ஆற்றிய பங்களிப்பை கொண்டாடுவது ஆகியவை இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...