அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், ஆடித் திருவாதிரை விழா, ஜூலை 27ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதற்காக, பிரதமர் மோடி, ஜூலை 26ம் தேதி தமிழகம் வருகிறார். துாத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரயில்வே உட்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை – போடி இடையே, 90 கி.மீ., மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின், முன்னோட்டமாக ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாகர்கோவில் டவுன் – கன்னியாகுமரி 21; ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் 12; திருநெல்வேலி – மேலப்பாளையம் 4 கி.மீ., துாரம் என, மூன்று இரட்டை பாதை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட திட்டப் பணிகள், 1,000 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் திட்டங்களைபிரதமர் மோடி ஜூலை 26ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு கூறினர்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |