ஆரோக்கியமற்ற ரேஷன் பொருட்களால் மக்கள் அவதிப்பட வேண்டுமா: நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆரோக்கியமற்ற முறையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களால் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதிப்பட வேண்டுமா? என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் கழிவறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற நிலையில் கழிவறையில் அடுக்கி வைத்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுதான் நல்லாட்சியின் லட்சணமா?

இவ்வாறு பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகளுக்கும் அவர்களைக் கண்காணிக்கத் தவறிய அமைச்சர்களுக்கும் கழிவறையில் அடுக்கி வைக்கப்பட்ட அதே அரிசி மூட்டைகளிலிருந்து ஆளுக்கொரு கிலோ அரிசியை எடுத்துக் கொடுத்து பொங்கி சாப்பிடச் சொல்ல வேண்டும். ஏழைகள் என்றால் எத்தனை இளக்காரம் இந்த ஆளும் அரசுக்கு? ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அல்லல்படும் மக்கள், ஆரோக்கியமற்ற முறையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களால் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதிப்பட வேண்டுமா?

கடந்த பட்ஜெட்டில் உணவு சேமிப்புத் துறைக்கான நிதியை திமுக அரசு குறைத்ததன் விளைவு தான் இன்று பராமரிப்பற்ற தானியக் கிடங்குகளில் உள்ள உணவுப் பொருட்கள் மழையில் நனைந்து அழுகி வீணாகிறது, ரேஷன் பொருட்களை சேமித்து வைக்க இடமில்லாமல் அரசு கழிவறையை நாடிச் செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவுப் பொருட்கள் முறையாக இருப்பு வைக்கப்படுகின்றனவா என்பதையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்யவேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...