வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி

”கார்கில் போர் நினைவு தினம், வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று கார்கில் தினத்தையொட்டி, பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கில் போர் நினைவு தினம், வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது. நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்.

தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவுகள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் முன்மாதிரியாகவும், ஊக்கமும் அளிக்கும். ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போர் நினைவிடத்தில் மரியாதை
டில்லியில் உள்ள போர் நினைவிடத்தில், கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கார்கில் தினத்தன்று, நாட்டின் கவுரவத்தைப் பாதுகாப்பதில் துணிச்சல், மன உறுதியை வெளிப்படுத்திய நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கார்கில் போரில் நமது ஆயுதப் படைகள் வெளிப்படுத்திய உறுதி மற்றும் தியாகம் காலத்தால் அழியாத நினைவூட்டல், அவர்களின் சேவைக்கு இந்தியா என்றும் கடமைப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...