துாத்துக்குடியில் ரூ.4,800 கோடிக்கு திட்டங்கள்; இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, துாத்துக்குடியில் இன்று, 550 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதுடன், 4,250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று துாத்துக்குடி வருகிறார்; இரவு, 8:00 மணிக்கு, துாத்துக்குடி விமான நிலையத்தில், 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய கட்டடத்தை துவக்கி வைக்கிறார்.

மொத்தம், 17,340 சதுர மீட்டரில், நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ஆண்டுக்கு, 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் உடையது. இதனால், தென்மாவட்டங்களில், சுற்றுலாவும், முதலீடும் அதிகரிக்கும். பின்,

விக்கிரவாண்டி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில், 2,350 கோடி ரூபாய் செலவில், 50 கி.மீ., நீளத்திற்கு சேத்தியாத்தோப்பு – சோழபுரம் நான்கு வழிச்சாலை; 200 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துாத்துக்குடி துறைமுக சாலையின் ஆறு வழிப்பாதை போன்றவற்றை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், 285 கோடி ரூபாயில், ஆண்டுக்கு, 69 லட்சம் டன் சரக்குகளை கையாளும் திறனில் அமைக்கப்பட்டுள்ள, வடக்கு சரக்கு தளவாட நிலையம் – 3ஐயும் திறந்து வைக்கிறார்

மதுரை – தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் ரயில் பாதையில், 90 கி.மீ., மின்மயமாக்கல் பணி; நாகர்கோவில் டவுன் – கன்னியாகுமரி பிரிவின் 21 கி.மீ., இரட்டைப் பாதை, ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் சந்திப்பு 12.87 கி.மீ., மற்றும் திருநெல்வேலி – மேலப்பாளையம், 3.6 கி.மீ., பிரிவுகளின் இரட்டை பாதைப்பணி 1,165 கோடி ரூபாயில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் துவக்கி வைக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும் தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் இருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மின் வழித்தட பணிக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். திட்டச்செலவு, 550 கோடி ரூபாய்.

துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்த பின், திருச்சி செல்லும் பிரதமர் மோடி, இரவு அங்கு தங்குகிறார். நாளை அரியலுார் கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் அவர், முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில், நினைவு நாணயம் வெளியிடுகிறார். சோழபுரம் கோவிலில் நடக்கும், ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். பிறகு திருச்சியில் இருந்து டில்லி செல்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...