முதலாம் இராஜேந்திர சோழன் அவர்களின் வரலாறு போற்றுதலுக்குரியது.
சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராஜேந்திர சோழன் அவர்கள் தீர்க்கதரிசி.
இராஜேந்திர சோழன் காலத்தில் சோழர் மரபும், நிர்வாகமும், ராணுவமும் நிலைபெற்று, தரைப்படையும், கடற்படை விரிவாக்கத்துக்கான உட்கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டு வலிமைமிக்க பேரரசு இருந்தது. மேலும் இவரது போர் வெற்றிகள் மிகவும் புகழ்பெற்றவை. இவர் காலத்தில் ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் ஆகியவை நன்கு வளரத் தொடங்கின. தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளும் முக்கியத்துவம் பெற்றன.
கங்கை நதிக்கரையை வென்ற இராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழன் என்ற பெயர் வந்தது வரலாற்று சிறப்புமிக்கது.
சோழர்களின் தலைநகரமாக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் கட்டிடக்கலைக்கும், கலை நயத்திற்கும், அரசியல் வலிமைக்கும் சான்றாகும்.
இந்தக் கோயில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரத்தை நிறுவி, அங்கு ஒரு பெரிய கோவிலை கட்டிய சோழப் பேரரசின் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவரான இராஜேந்திர சோழன் மக்கள் குறை தீர்த்து, நலன் காத்து, நாட்டிற்காக அர்ப்பணிப்போடு வாழ்ந்த மன்னர்.
இராஜேந்திர சோழன் மக்கள் குறை தீர்க்க எப்படி பணியாற்றினாரோ அதே போல நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களும் மக்கள் குறை தீர்த்து, நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்று, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது நமக்கு உறுதுணையாக இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்க, தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல காரணகர்த்தாவாக விளங்கும் பாரதப் பிரதமர் அவர்கள் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிவது மிகவும் பொருத்தமானது.
பாரதப் பிரதமர் அவர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடித் திருவாதிரை விழாவை ஒட்டி பிரகதீஸ்வரர் கோவிலில் கங்கை நீரால் பிரகதீஸ்வரருக்கு நடைபெறும் மகா அபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் மகிழ்ச்சிக்குரியது.
தமிழ்நாட்டிற்கு பாரதப் பிரதமரின் வருகையானது கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று பெருமைக்கும், தமிழகத்தின் பண்டையக் கால மன்னர்களின் புகழுக்கும் பெருமை சேர்ப்பதோடு, தமிழ்நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கும் துணை நிற்கும்.
இராஜேந்திர சோழ மன்னரின் வரலாற்றை இன்றும் நாம் அறிந்து இன்புறுவதற்கு ஏற்ப அவரைப் போற்றி புகழ் பாடுவதற்காக பாரதப் பிரதமர் அவர்கள் வருவதை தஞ்சை தரணி மட்டுமல்ல தமிழ்நாடே வரவேற்று, சோழர் காலத்து ஆட்சியை, ஆன்மிகத்தை பறைசாற்றுவோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி ஜிகே வாசன்
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |