ஆபரேஷன் சிந்துார் விவாதம்: காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஜெய்சங்கர்

சிந்துார் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் வெளுத்து வாங்கினார்.

ஆபரேஷன் சிந்துார் தொடர்பான எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

நீங்கள் ஏன் தாக்குதலை திடீரென்று நிறுத்தி விட்டீர்கள் என்று எங்களை கேட்கிறீர்கள். ஏன் மேலும் தாக்குதலை தொடர வில்லை என்று கேட்கிறீர்கள். கேட்பவர் யார் என்றால், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே சிறந்த நடவடிக்கை என்று அமைதியாக இருந்தவர்கள் தான்.

கடந்த 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஷார்ம் ல் ஷேக் நகரில் நடந்தது தான் பதில் நடவடிக்கை.

அப்போதைய காங்கிரஸ் அரசும், பாகிஸ்தான் பிரதமரும், ‘பயங்கரவாதம் தான் இரு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல்’ என்று ஒப்புக்கொண்டனர். முதல் முறையாக பலுசிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டது. நீங்கள் மும்பை பயங்கரவாத தாக்குதலையும், பலுசிஸ்தானையும் ஒரே தட்டில் வைத்து விட்டீர்கள்.

நான் சீனாவுக்கு நமது நாட்டின் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக சென்றேன். நான் ஒலிம்பிக் போட்டிகளை பார்ப்பதற்காக போகவில்லை. (காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை காண சென்றிருந்தனர் )

நான் ரகசிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த சீனா செல்லவில்லை. நமது நாட்டின் ஒரு அங்கமான ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் மக்களுக்கு, சீனா ஸ்டேப்பிள் செய்யப்பட்ட விசா வழங்கியபோது, ஒரு சிலர் ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...