பிரதமரின் தனி விமானத்தில் பயணம் மறக்க முடியாத நிகழ்வு: நாகேந்திரன்

‘பிரதமர் மோடி, துாத்துக்குடி முதல் திருச்சி வரை, அவரது தனி விமானத்தில் என்னை அழைத்து சென்றது, என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் மோடி, துாத்துக்குடியில் 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். இந்திய வரலாற்றிலேயே தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் மன்னர்கள் மீது அளவற்ற நேசம் கொண்ட பிரதமர், நம் மோடி ஒருவரே. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு வந்த முதல் பிரதமர் என்ற வரலாற்று சிறப்பையும் பெற்றிருக்கிறார். தமிழகத்தை நாத்திக கரும்புகை சூழ முயன்றாலும், ‘தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணிய பூமி’ என்பது, மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதன் வெற்றி முழுதும் பிரதமர் மோடியையே சாரும்.

பார்லிமென்டில் செங்கோலை நிறுவியது முதல், சோழ மன்னர்களுக்கு சிலை அமைப்பது வரை, தமிழர் அடையாளங்களை மீட்பதில் முனைப்புடன் செயலாற்றும் மோடியை, தமிழகம் மனதார வாழ்த்தி வணங்குகிறது.

மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்து, இரவு நெடுநேரம் துாத்துக்குடி விழாவையும், மறுநாள் காலை கங்கைகொண்ட சோழபுரத்தில் முப்பெரும் விழாவையும் முடித்துவிட்டு, டில்லி சென்ற பிரதமர் மோடி, ஓயாத கடல் அலை போன்றவர்.

ஒரு மனிதன் இத்தனை சுறுசுறுப்புடன் செயல்பட முடியுமா என இளைஞர்கள் வியந்து பார்க்கும் ஒப்பற்ற தலைவர். அந்த மாமனிதருடன் இரு நாட்களை கழித்தது, என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.

அது மட்டுமின்றி, துாத்துக்குடி முதல் திருச்சி வரை, அவரது தனி விமானத்தில் என்னை பிரதமர் மோடி அழைத்து சென்றதும், என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...