“பஹல்காம் தாக்குதல் இந்தியர்களை மத ரீதியாக பிளவுபடுத்த விதையாகத் தூவப்பட்டது” – பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி, “பஹல்காம் தாக்குதல் இந்தியா, இந்திய மக்களுக்கு எதிரான சதித் திட்டம். பஹல்காம் தாக்குதல் இந்தியர்களை மத ரீதியாக பிளவுபடுத்த விதையாகத் தூவப்பட்டது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த கொடூரமான சம்பவம், அப்பாவி மக்களை அவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது, கொடுமையின் உச்சம். இது இந்தியாவை வன்முறையின் நெருப்பில் தள்ள நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. இது இந்தியாவில் கலவரங்களைப் பரப்புவதற்கான ஒரு சதி. நாடு ஒற்றுமையுடன் அந்த சதியை முறியடித்ததற்காக இன்று நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. பல்வேறு எம்.பி.க்கள் பேசிய நிலையில், இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இந்த விவாதத்தின் மீது பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ராணுவத்தை சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பது கூட பாஜக அரசுக்குத் தெரியவில்லை. தனது இமேஜை காக்க ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். நமது படைகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவது அபாயகரமானது. இந்திய ராணுவத்தின் கைகளை பின்னால் கட்டாதீர்கள்” என ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...