‘மறு ஆய்வு செய்து கொள்ளுங்கள்’ : எதிர்க்கட்சிகளுக்கு நட்டா அறிவுரை

” கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள், தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும், ” என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் ராஜ்யசபாவில் நட்டா பேசியதாவது: எதிர்க்கட்சிகள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும். 2005 டில்லி தொடர் குண்டுவெடிப்பு, 2006 வாரணாசி பயங்கரவாத தாக்குதல், 2006 மும்பை உள்ளூர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு அப்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தகம், , பயங்கரவாதம், சுற்றுலா தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

2008 ஜெய்ப்பூரில் இந்தியன் முஜாகிதீன் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசின் திருப்திபடுத்தும் அரசியலின் எல்லையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள போலீஸ், ராணுவம் தான் அப்போதும் இருந்தது. ஆனால், அரசியல் உறுதி இல்லை. 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 2009ல் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் எந்த குறிப்பும் இல்லை.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசும் போது, ” எல்லைப்பகுதியை மேம்படுத்தக்கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. வளர்ச்சி பெறாத எல்லைப்பகுதி தான், வளர்ச்சியடைந்த எல்லையை விட சிறந்தது, ” எனக்குறிப்பிட்டார்.

அதேபோல் முன்னாள் உள்துறை அமைச்சர், ‘ எனக்கு காஷ்மீர் போகவே பயமாக இருக்கிறது,’ என்றார். நாம் இந்த நாட்டில் இருளில் வாழ்ந்தோம். 2014 – 2025ல் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற இடங்களில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர், ‘ உரி தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்களை தப்ப விட மாட்டோம்,’ எனத் தெரிவித்தார். அடுத்த 3 நாட்களுக்குள், சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாதிகளின் பயிற்சி தளங்கள் அழிக்கப்பட்டன. இது தான் மாற்றமடையும் இந்தியா. என்ன செய்வது பார்ப்போம் எனக்கூறியவர்களுடன் ஒப்பிட்டு, தற்போதைய அரசியல் உறுதியை பாருங்கள். இவ்வாறு நட்டா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...