அடுத்த 5 ஆண்டுகளில் 17,000 ரயில்பெட்டிகள் உற்பத்தி இலக்கு; அஷ்வினி வைஷ்ணவ்

அடுத்த 5 ஆண்டுகளில் 17,000 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் இன்று அவர் பேசியதாவது; ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வசதிக்காக பொது வகுப்பு மற்றும் ஏசி அல்லாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்த பயன்பாட்டில் உள்ள 82 ஆயிரம் ரயில் பெட்டிகளில் 70 சதவீதம் பொது வகுப்பு மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளாகும். ரயில்களில் உள்ள 69 லட்சம் இருக்கைகளில் 78 சதவீதம் இந்த இரு பிரிவுகளில் உள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் 17,000 பொது வகுப்பு மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளை உருவாக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2019-20ல் நாளொன்றுக்கு 13,169 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 2024-25ல் 13,940 ரயில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டில்லி-மும்பை மற்றும் டில்லி-ஹவுரா வழித்தடங்களில் (தோராயமாக 3,000 கி.மீ.,) விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. ஜூலை மாத இறுதி நிலவரப்படி, இந்த வழித்தடங்களில் சுமார் 2,200 கி.மீ., தொலைவு வரை பணிகள் நிறைவடைந்துள்ளன. 144 வந்தே பாரத் ரயில்சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024-25 ம் ஆண்டில் பொது வகுப்பு அல்லது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்தோரின் எண்ணிக்கை 651 கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டு 609 கோடியாக இருந்தது, எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...