அரசு திட்டங்கள் சுய விளம்பரத்திற்கு அல்ல: : தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில், ‘ஸ்டாலின்’ பெயரை பயன்படுத்தக் கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் வாயிலாக, மக்கள் பணத்தில் தி.மு.க., அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அ.தி.மு.க., – எம்.பி., சண்முகம் தொடர்ந்த வழக்கில் கிடைத்த இந்த தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம், ‘ஸ்டாலின்’ என்று தன் பெயரை, ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக்கொள்ளும் முதல்வர், அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்கு தானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணர வேண்டும்.

மேலும், சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு, ‘உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்’ என்று விளம்பர அரசியலை மனதில் வைத்து சூட்டிய பெயரை, உடனே நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்கி, தமிழக அரசு நீக்க வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...