உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.2,200 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​ வைத்​தார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தினம் பிரதமரின் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தின் மூலம் நாடு முழு​வதும் 10 கோடி விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.20,500 கோடி செலுத்​தப்​பட்டு உள்​ளது. விவ​சா​யிகளுக்​கான நிதி​யுதவி திட்​டம் விரை​வில் நிறுத்​தப்​படும் என்று காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்ட கட்​சிகள் விமர்​சனம் செய்​தன. ஆனால் இந்த திட்​டம் இன்​று​வரை வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

விவ​சா​யிகளின் நலன் கருதி தன்​-தன்யா கிரிஷி யோஜனா என்ற புதிய திட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் பின்​தங்​கிய மாவட்​டங்​களில் வேளாண் உற்​பத்தி அதி​கரிக்​கப்​படும். இந்​தத் திட்​டத்​துக்​காக ரூ.24,000 கோடி செல​விடப்​படும். வேளாண்மை சார்ந்த பொருளா​தா​ரத்​தில் பெண்​களின் பங்​களிப்பை அதி​கரிக்க லட்​சா​திபதி சகோ​தரி​கள் திட்​டத்தை மத்​திய அரசு செயல்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் 3 கோடி லட்​சா​திபதி பெண்​களை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

நாம் வெகு​விரை​வில் உலகின் 3-வது பெரிய பொருளா​தார நாடு என்ற பெரு​மையை எட்ட உள்​ளோம். இந்த நேரத்​தில் நமது இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு மிக​வும் முக்​கிய​மானவை. இதை கருத்​தில் கொண்டு மத்​திய அரசு செயல்​பட்டு வரு​கிறது. நாட்​டின் மக்​களுக்​கும் சில கடமை​கள், பொறுப்​பு​கள் உள்​ளன. அதாவது நாடு முழு​வதும் உள்​ளூர் பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​ளூர் பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று மக்​கள் உறு​தி​யேற்க வேண்​டும். நமது வீட்​டுக்​காக எந்த பொருளை வாங்​கி​னாலும் அது உள்​நாட்டு தயாரிப்​பாக மட்​டுமே இருக்க வேண்​டும். இந்​திய தொழிலா​ளர்​களின் வியர்​வைக்கு மதிப்​பளிக்க வேண்​டும்.

இந்த நேரத்​தில் இந்​திய வணி​கர்​களிடம் சிறப்பு வேண்​டு​கோளை முன்​வைக்​கிறேன். இப்​போது நிலை​யற்ற சூழலைக் கடந்து சென்று கொண்​டிருக்​கிறோம். எனவே சிறிய கடை முதல் பெரிய நிறு​வனங்​கள் வரை உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும். அடுத்து வரும் மாதங்​கள் பண்​டிகை காலம் ஆகும். குறிப்​பாக வரும் அக்​டோபரில் தீபாவளியை கொண்​டாட உள்​ளோம். திருமண சீசனும் வரு​கிறது. பண்​டிகை மற்​றும் திருமண சீசனில் உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும்.

வெளி​நாடு​களுக்கு சென்று திரு​மணம் செய்து நமது நாட்​டின் செல்​வத்தை வீணடிக்க வேண்​டாம் என்று அறி​வுறுத்​தினேன். எனது அறி​வுரையை ஏற்று பலரும் உள்​நாட்​டிலேயே திருமண விழாக்​களை நடத்​துகின்​றனர். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது. தேசத்​தந்தை மகாத்மா காந்​தி​யின் சுதேசி இயக்​கம், சுதந்​திர போராட்​டத்​தில் மிக முக்​கிய பங்கு வகித்​தது. சுதேசி இயக்​கத்​தின்​படி உள்​நாட்டு பொருட்​களை வாங்​கு​வது காந்​தி​யடிகளுக்கு நாம் செலுத்​தும் மரி​யாதை ஆகும். அனை​வரும் ஒன்​று​பட்டு உழைத்​தால் மட்​டுமே வளர்ந்த இந்​தியா என்ற லட்​சி​யத்தை நிச்​சய​மாக எட்ட முடி​யும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25 சதவீத வரியை விதித்​துள்​ளார். இந்த சூழலில் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​படும் பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்​திருப்​பது மிகுந்த முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...