பார்லியில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம்: கிரண் ரிஜிஜூ

”பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்” என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

பார்லி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பார்லிமென்ட் அலுவல்கள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், விளையாட்டு தொடர்பான இரண்டு முக்கிய முன்மொழியப்பட்ட சட்டங்களை லோக்சபா ஏற்க மறுப்பு தெரிவித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த கிரண் ரிஜிஜூ, ” பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்” என எச்சரித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: தேசிய நலனுக்காக மசோதாக்களை நிறைவேற்ற அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். விளையாட்டு தொடர்பான 2 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

பீஹாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் குறித்த விவாதங்களை பார்லியில் நடத்த முடியாது. ஏனெனில் இந்த நடைமுறை தேர்தல் கமிஷனின் நிர்வாக நடவடிக்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...