எத்தனால் கலந்த பெட்ரோலால் எந்த பிரச்னையும் இல்லை -நிதின் கட்கரி

”எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனத்துக்கு பாதிப்பு என்று எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்,” என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சவால் விட்டுச்சொன்னார்.

இது தொடர்பாக, தனியார் செய்தி சேனல் நடத்திய மாநாட்டில் நிதின் கட்கரி பேசியதாவது: பெட்ரோலில் எத்தனால் கலக்கும், அரசின் திட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்.

சாதாரணமாக வாகனங்களுக்கு ஏற்படும் பிரச்னையை கூட, இதுதான் காரணம் என விமர்சனம் செய்யப்படுகிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறைகிறது. பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த திட்டம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை இலக்குகளை ஆதரிக்கிறது. இந்த திட்டத்தால் பொருளாதாரம் மேம்படுகிறது.

வருமான வாய்ப்பு
எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்கும் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. சோளம் குவிண்டாலுக்கு ரூ.1,200க்கு விற்கப்பட்டது. இப்போது அது எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது. தற்போது, ஒரு குவிண்டால் ரூ.2,600 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கிராமப்புற விவசாய வருமானத்திற்கு நேரடியாக பயனளிக்கிறது. இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...