தமிழக இயற்கை விவசாயிகளுடன் ஆர்வமுடன் உரையாடிய பிரதமர்

தமிழகத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகளுடன், மோடி ஆர்வமுடன் கலந்துரையாடினார்.

டில்லி பார்லிமென்டில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தில், நேற்று தமிழகத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகளான, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் கருப்பையா, இயற்கை விவசாயிகளான, விதை யோகநாதன், கணபதி அஜிதன், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் அவரை சந்தித்தனர்.

உற்சாகம் இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட, ‘எக்ஸ்’ தள பதிவில், ‘தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவை, நேற்று காலை பார்லிமென்டில் சந்தித்தேன். புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும், புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில், அவர்களின் கவனம் மற்றும் அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தது, உற்சாகம் அளிப்பதாக இருந்தது’ என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து, பிரதமரை சந்தித்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் கருப்பையா கூறியதாவது:

வரும் அக்., 16, 17, 18ம் தேதிகளில், கோவை கொடிசியா அரங்கில், இயற்கை விவசாயம் தொடர்பான மாநாடு நடக்க உள்ளது.

அதற்கு அழைப்பதற்காக பிரதமர் மோடியை சந்தித்தோம். எங்களுடன், 15 நிமிடங்கள் மிகவும் ஆர்வமுடன் பேசினார்.

மல்லிகை மாலை, வாழை நாரில் செய்யப்பட்ட சால்வை, சிறுதானியங்களில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை வழங்கினோம்.

கோரிக்கைகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, அதிக நிதி ஒதுக்க வேண்டும்; நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளே விற்பனையாளராக மாற அரசு உதவ வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.

விளை பொருட்களை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் வாயிலாக, எப்படியெல்லாம் இயற்கை விவசாயத்தில் லாபம் பெற முடியும் என விவரித்தோம். அனைத்தும் கேட்டு உற்சாகமடைந்த அவர், எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...