ஊடுருவல்காரர்கள்தான் அவர்களின் ஓட்டு வங்கி; காங்கிரஸ் மீது அமித்ஷா

ராகுல் மற்றும் அவரது கட்சியின் முக்கிய ஓட்டு வங்கியாக ஊடுருவல்காரர்கள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

பீஹாரின் சீதாமர்ஹியில், நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: தேஜஸ்வி யாதவின் தந்தையும் தாயும் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மாநில வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? மத்திய அமைச்சராக இருந்த போது லாலு, பீஹாரில் ரயில்வே உள்கட்டமைப்பிற்காக ரூ.1,132 கோடியை வழங்கினார். அதே நேரத்தில் எங்கள் அரசு ரூ.10,066 கோடியை வழங்கியது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்தது. அவர்களைக் கேள்வி கேட்கக்கூட யாரும் இல்லை.ஓட்டு வங்கி அரசியலுக்காக தேசிய பாதுகாப்பை சமரசம் செய்தனர். குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. பயங்கரவாதிகள் பயமே இல்லாமல் தாக்குதல் நடத்தி விட்டு பாகிஸ்தானுக்கு ஓடி விட்டனர். இதற்கு நேர்மாறாக, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா கடும் பதிலடி கொடுத்தது.

உரி தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம். புல்வாமாவுக்குப் பிறகு, நாங்கள் ஒரு வான்வழித் தாக்குதலை நடத்தினோம். மேலும் பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு, நாங்கள் ஆப்பரேஷன் சிந்தூரைத் தொடங்கி பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை ஒழித்தோம்.

பீஹாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ராகுல் அரசியலில் ஈடுபடுகிறார். ராகுல் மற்றும் அவரது கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக ஊடுருவல்காரர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...