பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: ராஜ்நாத் சிங்

”கடந்த 2024 – 25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1,50,590 கோடி ஆக அதிகரித்துள்ளது,” என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ஆயுதங்கள், தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக உள்நாட்டிலேயே ஆயுதங்கள், தளவாட தயாரிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

கடந்த 2024 – 25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வளர்ச்சி ஆகும். 2019-20ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை ரூ.79,071 கோடியாக இருந்ததிலிருந்து 90% அதிகரிப்பையும் குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது: இது பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல் ஆகும். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகிறது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...